40 வயது பெண்ணை கொடூரமாக துன்புறுத்தி; கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் கைது...!

40 வயது பெண்ணை கொடூரமாக துன்புறுத்தி; கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் கைது...!A 40-year-old woman was brutally harassed; Auto driver arrested for gang rape..

நெல்லையில் 40 வயது பெண்ணை செங்கல் சூளையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கணவனை 40 வயது பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் நெல்லைக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (44) என்பவருடன் பழக்கம் உண்டானது.

கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லைக்கு வந்த அந்த பெண்ணை, முருகன் அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முருகன் மற்றும், அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தர்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் முருகன், அவரது நண்பர்கள் மகாராஜன், மணிகண்டன் (32), பேராச்சி (31), ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.