9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. எச்.எம்-க்கு ஆதரவாக பேசி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆங்கில ஆசிரியர்..!

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. எச்.எம்-க்கு ஆதரவாக பேசி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆங்கில ஆசிரியர்..!


9th standard girl harassed by teacher

பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் தலைமறைவாக, விசாரணைக்கு வந்த அதிகாரிகளுக்கு ஆங்கில ஆசிரியர் கொலை மிரட்டல் விடுத்த பயங்கரம் நடந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சிறுவயல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன். 

இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. சம்பவத்தன்று 9ம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 

ramanathapuram

புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளை, பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மிரட்டி இருக்கிறார். ரவிச்சந்திரனும் தலைமறைவாகி இருக்கிறார். இதனால் விஷயம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.