தமிழகம்

மர்மமான முறையில் கொடூரமாக இறந்துகிடந்த 80-க்கும் மேற்பட்ட ஆடுகள்... தாக்கியது மனிதனா? அல்லது விலங்கா?..!

Summary:

மர்மமான முறையில் கொடூரமாக இறந்துகிடந்த 80-க்கும் மேற்பட்ட ஆடுகள்... தாக்கியது மனிதனா? அல்லது விலங்கா?..!

மர்மமான முறையில் 80-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே மின்நகர் பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். 

இந்த நிலையில், ஆட்டுப்பண்ணையில் புகுந்த மர்மவிலங்கு ஒன்று 80-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக்குதறி கொன்றுள்ளது. இது குறித்து அறியாத விவசாயி காலை வந்து பார்க்கும்போது, 80-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின் இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் ஆடுகளை கடித்தது சிறுத்தை அல்லது கழுதை புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

இதனால் 80க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்ற மர்ம விலங்கை பிடிப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Advertisement