வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அட கடவுளே!! அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு!! 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனாவுக்கு பலி!!
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படும், 400 கும் அதிகமான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். மேலும் இந்த கொரோனா இரண்டாவது அலையில் பெரும்பாலான மருத்துவர்களும் உயிரிழந்துவருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா. முதுநிலை பயற்சி மருத்துவரான இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்தநிலையில் தற்போது அவர் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதனால் சமீபத்தில் பெற்றோர் அவருக்கு சீமந்தம் நடத்தியுள்ளனர்.
கார்த்திகாவின் சீமந்தத்திற்கு பிறகு அவர் வீட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் கார்த்திகாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சைபெற்றுவந்துள்ளார்.
ஆனால் தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார். கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.