10 வயது சிறுமியிடம் அத்துமீறிய 73 வயது முதியவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!73 years old man harassment to girl in Villupuram

விழுப்புரம் அருகே உள்ள ராமையன் பாளையம் கிராமத்தில் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு விவசாய நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்ற முதியவர் புற்கள் அறுத்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுமியை அழைத்து புற்கட்டை தூக்கி விட உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த சிறுமியும் வயதான தாத்தா தான் என நினைத்து அவருக்கு உதவி செய்யலாம் என சென்றுள்ளார். அப்போது முதியவர் முனுசாமி, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

harassment

மேலும் இதுகுறித்து யாரையாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை இதனால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடிய சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முதியோர் முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.