சரவணா கோல்டு பேலஸின் 69 கோடி சொத்துகள் மீண்டும் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை..!

சரவணா கோல்டு பேலஸின் 69 கோடி சொத்துகள் மீண்டும் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை..!


69 crore assets of Saravana Gold Palace are again frozen by the Enforcement Directorate

அமலாக்க துறை, சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலசுக்கு சொந்தமான ரூ.66.93 கோடி அசையா சொத்துகளை முடக்கியுள்ளது. 

சென்னையில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017-ஆம் வருடம் இந்தியன் வங்கியில் ரூ.235 கோடி கடன் வாங்கியது. இந்நிலையில், கடனை முறைகேடாக வாங்கி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததாக அந்த நிறுவனத்தின் மீது அப்போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கே.எல்.குப்தா சிபிஐயில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் இரண்டு பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தது. மேலும் சட்டவிரோத பணபரிமாற்ற விவகாரம் என்பதால், அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம், சரவணா ஸ்டோர் கோல்டு பேலசுக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளை கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. 

இந்நிலையில் நேற்று தனியார் வங்கியை ஏமாற்றி சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி  சென்னையில்  உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.66.93 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.