தமிழகம் வீடியோ

போனில் சிரித்து சிரித்து பேசிய 60 வயது மனைவி..! சந்தேகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவன்..! என்ன கொடுமை சார் இது..?

Summary:

65 years old husband buried 60 years old wife for doubt

60 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 65 வயது கணவன் தன் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் தியாகி சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர்கள் ஷேசாத்சலம், மல்லிகா தம்பதியினர். இவர்களது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து அவர்கள் வேறு வேறு பகுதிகளில் வசித்துவந்த, 65 வயதாகும் ஷேசாத்சலமும், 60 வயதாகவும் மல்லிகாவும்  தனியாக ஒருவீட்டில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் 60 வயது மல்லிகா அடிக்கடி யாருடனோ செல்போனில் சிரித்து சிரித்து பேசியதாக 65 வயது கணவன் அவர் மீது கோபப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மல்லிகா மீண்டும் செல்போனில் சிரித்து சிரித்து பேசிய நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து மல்லிகா மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் மல்லிகா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியநிலையில் கணவனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

60 வயது மனைவி மீது சந்தேகப்பட்டு 65 வயது கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement