தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இடி-மின்னல், சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை; குளுகுளு சூழ்நிலையால் கொண்டாட்டத்தில் மக்கள்.!
தமிழ்நாட்டின் வளிமண்டல பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குளுகுளு சூழ்நிலையை மக்கள் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
வறுத்தெடுத்த கோடை வெயில்
கடந்த கோடைகாலம் என்பது மக்களை கடுமையாக வாட்டி வதைத்த விஷயமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். வெயில் சார்ந்த பிரச்சனைகள் வடமாநிலங்களில் மரணத்தையும் ஏற்படுத்தி இருந்தது. ஜூன் 06ம் தேதியான இன்று பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: #JunstIN: 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அதேபோல, இரவு 9 மணிவரையில் வேலூர், இராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தென்காசி உட்பட 27 மாவட்டங்களில் மழைக்கான முன்னறிவிப்பும் விடுக்கப்பட்டு இருந்தது.
சூறைக்காற்றுடன் மழை
இந்நிலையில், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை, தாழவேடு, மதுரை மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், செய்யாறு, விருதுநகர் ஆகிய பகுதிகள் இடி-மின்னல் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளுகுளு சூழ்நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!