திருமணமான 7மாதத்திலேயே 5மாத இளம் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்! கதறும் குடும்பத்தார்கள்!

திருமணமான 7மாதத்திலேயே 5மாத இளம் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்! கதறும் குடும்பத்தார்கள்!


5month pregnant lady commits suicide

இந்தியாவில் விழுப்புரம் மாவட்ட திருவெண்ணைநல்லூர் அருகே  ஆனந்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கணேஷ் பாபு. 28 வயது நிறைந்த இவர் வேன் டிரைவராக உள்ளார். இந்நிலையில்  இவருக்கு தொட்டிமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சூர்யா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்த நிலையில் கணவர் கணேஷ் பாபுவிற்கும், சூர்யாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மேலும்  சமீபத்திலும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் சூர்யாவை அடித்துள்ளார்.

suicide

இதனால் மனமுடைந்து அழுதுகொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து அறைக்கு சென்று  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே இதனை கண்ட கணேஷ் பாபு,  சூர்யாவின் பெற்றோருக்கு  போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அங்கு விரைந்த சூர்யாவின் பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய தங்களது மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டதும் சூர்யாவின் குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர்.பின்னர் இதுகுறித்து கணேஷ் பாபு மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் கணேஷ் பாபு மற்றும் அவரது தாய் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.