54 வயது விவசாயி அடித்து கொலை... தவெக, அதிமுக நிர்வாகி கைது.!!
சிவகங்கை மாவட்டம் செங்கல்பட்டு கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சந்திரன்(54) எனும் விவசாயி கீரைகளை எடுத்துக்கொண்டு காரில் சென்ற போது தமராக்கி கிராமத்தை சேர்ந்த 2 நபர்கள் சந்திரனின் காரை வழிமறித்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சந்திரன் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
வீட்டிற்கு செல்லும் பாதி வழியிலேயே நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தினர் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் படி சந்திரனை தாக்கிய அந்த 2 நபர்கள் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த பிரபு குமார்(45 ), அருண் பிரகாஷ்(20) என தெரிய வந்தது. இந்த 2 நபர்களும் முன்பகை காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாமென போலீசார் கருதுகின்றனர்.
குற்றவாளிகளான பிரபு குமார் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவுக்காரர். மற்றொரு குற்றவாளியான அருண் பிரகாஷ் தவெக கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!
இதையும் படிங்க: திருநங்கை நடுரோட்டில் குத்தி கொலை... முன்பகையால் வாலிபர் வெறி செயல்.!! 5 பேர் கைது.!!