தமிழகம்

விவசாய பணிக்காக பெண்களை ஏற்றிச் சென்ற குட்டி யானை.! திடீரென நடந்த விபத்து.! சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் பலி.!

Summary:

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே குட்டி யானை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்து புரம் கிராமத்திலிருந்து மணியாச்சி கிராமத்திற்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக குட்டி யானையில் பணியாட்கள் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மணியாச்சி அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கியது.

அங்கு நடந்த விபத்தில் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பணிக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement