கார் மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்: காரில் சென்ற 5 பேர் பலி 6 பேர் படுகாயம்..!

கார் மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்: காரில் சென்ற 5 பேர் பலி 6 பேர் படுகாயம்..!


5 people were killed and 6 were seriously injured when an Omni bus collided with a car

சேலம் மாவட்டம், ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்ற கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர், ஆம்னி காரில், ஒட்டம் பாறை பகுதிக்கு ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றனர்.

அதே வழியில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சந்தியா (20), சரண்யா (26), ராஜேஷ் (29), ரம்யா (25), சுகன்யா (28), ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் தன்ஷிகா (11), பெரியண்ணன் (38), புவனேஸ்வரி (17), கிருஷ்ணவேணி (45), உதயகுமார் (17), சுதா  (36), ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆர்.டி.ஓ. சரண்யா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.