தமிழகம்

அடி தூள்... மு.க ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து.! தமிழக மக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி.!

Summary:

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிப

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைகிறது. இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தநிலையில், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு.க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பல முக்கிய ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டார். 

முதலாவதாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000 நிதியுதவி, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ3 குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
 
இதைத்தொடர்ந்து நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்ற கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.


Advertisement