தமிழகம்

வரிசையாக செத்து விழுந்த 5 பசுமாடுகள்..! பதறிய உரிமையாளர்கள்..! காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்.!

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்து அமைந்துள்ள பதுவஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் சில பசுமாடுகள் புற்களை மேய்ந்துகொண்டிருந்துளது. அப்போது அந்த வயல் வழியாக சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் அறுந்து பசுமாடுகளின் மேல் விழுந்துள்ளது.

இதில் குட்டியம்மாள் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள், மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோரது தலா ஒருமாடுகள் என மொத்தம் 5 பசுமாடுகள் சம்பவம் இடத்திலையே மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது.

உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே மின்வாரியத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மின்வாரியத்தின் அலட்சியத்தால்தான் பசுமாடுகள் உயிரிழந்ததாகவும், அதற்கான இழப்பீட்டை மின்வாரியம் தங்களுக்கு தரவேண்டும் எனவும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


Advertisement