சசிகலாவுடன் பேசியதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்.! ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அதிரடி உத்தரவு.!

சசிகலாவுடன் பேசியதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்.! ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அதிரடி உத்தரவு.!


5-admk-executives-fired-for-talking-to-sasikala

சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபிறகு அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சசிகலாவுடன் பேசியதாக அ.தி.மு.க..வில் இருந்து மேலும் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க தலைமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ. பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும், சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சண்முகபிரியா, திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர் டி. சுந்தர்ராஜ் ஆகிய 5 பேரை அ.தி.மு.க. தலைமை, கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. கட்சியினர் அவர்களோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.