13 வயது சிறுமியுடன் மாயமான 49 வயது மதபோதகர்! சிறுமியின் நிலை என்ன? கதறும் தந்தை!

13 வயது சிறுமியுடன் மாயமான 49 வயது மதபோதகர்! சிறுமியின் நிலை என்ன? கதறும் தந்தை!


49-man-kidnapped-13-year-girl

 திருவண்ணாமலையை போளூர் சிவராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜெயராஜ். 49 வயது நிறைந்த இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடைபெற்று விவாகரத்தான நிலையில் அவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மலைவாழ் சிறுமிகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார் .

இந்த நிலையில் அவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன்  தலைமறைவாகியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர்கள் ஜெயராஜ் தனது மகளை கடத்தியதாக போலீசில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஜெயராஜை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

kidnap

இதையடுத்து சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்; அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளை ஜெயராஜ் கடத்திசென்றுவிட்டான். தயவுசெய்து கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீர் மல்க காவல்துறை மற்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.