தமிழகம்

24 வயது இளைஞருடன் ஏற்பட்ட காதல்... 42 வயது பெண் எடுத்த துணீகர செயல்.!

Summary:

தன்னுடன் வாழ மறுத்ததால் 24 வயது இளைஞரை கத்தியால் குத்திய 42 வயது பெண்ணின் துணீகர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(24). இவர் அப்பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரதீப் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் பிரமிளா என்ற 42 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

பிரமிளாவின் கணவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பிரமிளா கொடைக்கானலில் உள்ள அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு பிரதீப் அடிக்கடி உதவிகளை செய்து வந்துள்ளார்.

அதனையடுத்து இருவரும் நெருங்கிய பழக ஆரம்பித்துள்ளார். இச்செய்தியை பற்றி கேள்வி பட்ட பிரதீப்பின் பெற்றோர் பிரதீப்புக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூறவே பிரமிளா தன்னை உடனடியாக திருமணம் செய்யுமாறு பிரதீப்பை வழியுறுத்தியுள்ளார்.

ஆனால் பிரதீப் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் கோபமான பிரமிளா வீட்டில் இருந்த கத்தியால் பிரதீப்பின் தலை மற்றும் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement