அரைநிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த சாந்தி.. வீட்டை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அரைநிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த சாந்தி.. வீட்டை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி40 years women murdered near Cudallor who live alone

வீட்டில் தனியாக வசித்துவந்த பெண் அரைநிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகர் பகுதியில் தனியாக வசித்துவந்தவர் 40 வயதாகும் சாந்தி. இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டநிலையில், மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனால் சக்தி நகர் பகுதியில் கடந்த 7 மாதமாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அரசி வியாபாரம் செய்துகொண்டு அங்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில் தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம்போடும் சாந்தி இன்று நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் அரைநிர்வாண கோலத்தில், வயிற்றில் கத்தி குத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.

உடனே இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாந்தி சடலமாக கிடந்த இடத்தில் இரத்த கரையுடன் கிடந்த ஒரு சட்டையையும், சாந்தியின் செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்,

பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை சம்மந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சாந்தி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா? திருட்டுக்காக நடந்த கொலையா என போலீசார் பல கோணங்களில் விசரனை நடத்திவருகின்றனர்.

வீட்டில் தனியாக வசித்துவந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.