தமிழகம் டெக்னாலஜி 18 Plus

பேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி.. நேரில் பார்க்க சர்ப்ரைஸா போன இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

Summary:

பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயதாகும் சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் எப்போதும் பேஸ்புக்கில் பிசியாக இருக்கும் சிவா எதேச்சையாக அனுஷ்யா என்ற அழகான பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பார்த்து அந்த நபருக்கு பிரென்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.

பதிலுக்கு எதிர் திசையில் இருந்தும் ரெக்வெஸ்ட் அக்செப்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சிவா தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்பதை மறைத்து தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் ப்ரொபைலில் பதிவிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து தனது காதலை வளர்த்துள்ளார் சிவா.

அந்த பெண்ணும் சிவாவிடம் ஆசையாக பேசி அவ்வப்போது காசு வாங்கியுள்ளார். இப்படியாக சிவா அந்த பெண்ணிற்கு சுமார் மூன்று லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த காதலியை நேரில் பார்ப்பதற்காக சிவா அந்த பெண்ணிடம் கூறாமல் சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என எண்ணி பரிசுப் பொருட்களுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுத்தெருவில் உள்ள அனுசியா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபோதுதான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இத்தனை நாட்களாக தன்னிடம் பேசிக்கொண்டிருந்தது ஒரு இளம் பெண் என நினைத்த சிவாவுக்கு முதல் அதிர்ச்சி என்னவென்றால் அவரிடம் பேசியது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அனுஷ்யா.

இரண்டாவது அதிர்ச்சி என்னவென்றால், முகநூலில் இருந்தது அந்த பெண்ணின் உண்மையான புகைப்படம் இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்தது அனுஷ்யாவின் பக்கத்துக்கு வீட்டு இளம் பெண்ணுடைய புகைப்படம். இவை அனைத்தையும் தெரிந்து அதிர்ச்சி அடைந்த சிவா, இந்த சம்பவம் குறித்து பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. போலி முகநூல் பக்கம் மூலம் காதலிப்பதாக நடித்து பணம் பறிக்க கூறி அனுஷ்யாவுக்கு ஐடியா கொடுத்தது அந்த பெண்ணின் தம்பிதான். அதற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து இதுபோன்று வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளார்களா என விசாரித்துவருகின்றனர்...


Advertisement