குடிகார தந்தையால் பாம்பு கடித்து உயிரிழந்த 4 வயது சிறுமி.! சிக்கிய தந்தை.! அதிர்ச்சி பின்னணி

குடிகார தந்தையால் பாம்பு கடித்து உயிரிழந்த 4 வயது சிறுமி.! சிக்கிய தந்தை.! அதிர்ச்சி பின்னணி


4 years child died snake bite

கன்னியாக்குமரியின் காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்த சுரேந்திரன்  என்பவருக்கு ஷிஜிமோள் என்ற பெண்ணுடன் திருமணமாகி 12, 9 வயதில் மகன்களும், 4 வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். மதுபோதைக்கு அடிமையான சுரேந்திரன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துண்புறுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 13ம் தேதி அன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த சுரேந்திரன், வீட்டில் தகராறில் ஈடுபட்டு மனைவியின் முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். மேலும் குழந்தைகளையும் தாக்கியதோடு அனைவரையும் கொன்று விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவரது மகள் சுஷ்விகாமோள் வீட்டின் பின்புறமுள்ள ரப்பர் தோட்டத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டுள்ளார்.

அப்போது எதிர்பாரா விதமாக விஷபாம்பு ஒன்று சுஷ்விகா மோளை கடித்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுஷ்விகா மோள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ரவீந்திரன் மீது அவருடைய மனைவி ஷிஜிமோள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சுரேந்திரனை கைது செய்துள்ளனர்.