காவிரியாற்றில் செல்பி, பெற்றோர் கண்முன்னே ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்ட 4 வயது குழந்தை.!

காவிரியாற்றில் செல்பி, பெற்றோர் கண்முன்னே ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்ட 4 வயது குழந்தை.!



4 year boy fallen in kaveri river

பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றில் பெற்றோர்கள் செல்பி எடுத்த போது , 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது .மேலும் இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

      4 year boy

இந்நிலையில் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக பாபு என்பவர் அவரது மனைவி சோபா மற்றும் 4 வயது மகன் தன்வந்த் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்று பாலத்திற்கு வந்துள்ளார் .

மேலும் கரை புரண்டும் ஓடும் வெள்ளத்தை செல்பி எடுப்பதற்கு ஆசைப்பட்ட பாபு, பாலத்தின் தடுப்பு சுவர் ஓரத்தில் நின்று மகனை ஒரு கையில் தூக்கி பிடித்து, மற்றொரு கையில் செல்போன் வைத்தும்  செல்பி எடுத்துள்ளார் .

அப்போது குழந்தை தன்வந்த் திடீரென திமிற நிலை தடுமாறியதில் குழந்தை ஆற்றில் விழுந்தது.பாலத்தின் நடுப்பகுதி என்பதால் குழந்தை வேகமாக  அடித்துச் செல்லப்பட்டது.

4 year boy

இதைக்கண்ட பெற்றோர்கள் கதறி துடித்து யாராவது குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார்கள். 

ஆனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஆற்றில் குதிக்க முன்வரவில்லை.
 பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு  வீரர்கள்  குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.