கஜா: நிவாரண உதவிக்காக சாலையோரத்தில் நின்ற பெண்கள் மீது வேன் மோதி பரிதாப பாலி!

கஜா: நிவாரண உதவிக்காக சாலையோரத்தில் நின்ற பெண்கள் மீது வேன் மோதி பரிதாப பாலி!


4 girls dead in van accident near gaja camp

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம்  நீர்முளை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் நிவாரண உதவிக்காக காத்திருந்த 4 பெண்கள் மீது வேகமாக வந்த வேன் மோதியதில் நான்கு பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.  உட்புற கிராமங்களில் அரசு சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படாத நிலையில் பள்ளிகள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்களில் அந்தந்த பகுதி மக்கள் தாங்களாகவே தற்காலிக முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

4 girls dead in van accident near gaja camp

இந்நிலையில் நாகை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது நீர்முளை கிராமத்தில்  கஜா புயலால் வீட்டை இழந்த மக்கள் நீர்முளையில் உள்ள நான்கிற்க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய முகாமில் தங்கியிருந்த சுமதி, அமுதா, ராஜகுமாரி, சரோஜா ஆகிய நான்கு பெண்களும் நேற்று இரவு 9:30 மணி அளவில், இரவு உணவை முடித்துவிட்டு சுகாதார நிலைய வாயிலில் உள்ள, சாலையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

மின்சார வசதி இல்லாததாலும், வேறு எந்த வெளிச்சமும் இல்லாததாலும் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. அப்போது அந்த சாலை வழியே வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த நான்கு பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்ற இருவரும், மருத்துவமனைக்கு சென்றதும் இறந்துவிட்டனர்.

4 girls dead in van accident near gaja camp

கஜா புயலின் காரணமாக அனைத்தையும் இழந்துவிட்ட இந்த மக்கள் தற்போது உயிரையும் இழந்துவிட்டனர். கஜா புயல் ஏற்படுத்திய நேரடி பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இதைப்போன்ற பல்வேறு இன்னல்கள் மக்களுக்கு மேலும் வேதனையை அளிக்கிறது. நீர்முளை கிராமத்தில் 4 பெண்கள் உயிரிழந்தது டெல்டா மாவட்ட மக்களிடையே மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.