3வதும் பெண் குழந்தை.. பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு.. போலீசார் விசாரணை!

3வதும் பெண் குழந்தை.. பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு.. போலீசார் விசாரணை!


3Rd girl baby death in dindugal

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முருகவேல் - தீபா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தீபா 3வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீபாவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தீபா தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்துள்ளனர்.

dindugal

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வேடசந்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தை இறந்ததா அல்லது பெற்றோர்களே கொலை செய்து புதைத்தார்களா என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.