38 வயசு ஆயிடுச்சி! இன்னும் குழந்தை பிறக்கவில்லையே..! ஏங்கிய கணவன் எடுத்த முடிவு! தவிக்கும் மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். 38 வயதாகும் அன்பழகனுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் அன்பழகன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு குழந்தை இல்லத்தை நினைத்து விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அன்பழகன் நேற்று தனது வயலில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அன்பழகனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உடல்நிலை மிக மோசமானதை அடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.