தமிழகம்

கதறிய பெற்றோர்.! பதறிய மருத்துவர்கள்..! அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை பலி..

Summary:

3 years old boy dead when television felt on his body

அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டி சிறுவன் மீது விழுந்தநிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூர் அகரம் பகுதியில் தான்  இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது வீட்டிற்குள் யாரும் இல்லை. 3 வயது சிறுவன் கவியரசுமட்டும் வீட்டிற்குள் தனியாக விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அவன் விளையாடிக்கொண்டிருந்த இடத்தின் அருகில் இருந்த அலமாரியில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று இருந்துள்ளது.

அதே அலமாரியில் தொலைக்காட்சி பெட்டிக்கு மேல் செல்போன் சார்ஜில் போட்டவாறு இருந்துள்ளது. அப்போது தொலைபேசிக்கு திடீரெனெ ஒரு அழைப்பு வர, தொலைபேசி சத்தத்தை கேட்ட கவியரசு ஓடிச்சென்று தொலைபேசியை எடுக்க முயற்சித்துள்ளான்.

அப்போது செல்போனில் மாட்டப்பட்டிருந்த சார்ஜர் ஒயர் டிவியில் சிக்கியவாறு டிவியுடன் சேர்ந்து கீழே நின்றுகொண்டிருந்த கவியரசு மீது விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த கவியரசுவின் தந்தை குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தையை சோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement