தமிழகம் காதல் – உறவுகள்

3 மனைவிகளுடன் குதூகலமாக இருந்த வாலிபர்.! இறுதியில் கடைசி மனைவியால் நேர்ந்த துயரம்!!

Summary:

3 marriage man comits suicide

தர்மபுரி மாவட்டம் தாண்டவம் கிராமத்தில் வசித்து வந்தவர் சிங்காரவேலு. அழகு கலை நிபுணரான இவர் தமிழகம் முழுவதும் கிளைகளை வைத்திருக்கும்  பிரபலமான பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

 இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலு தேனியில் உள்ள கிளைக்கு மாற்றுதலாகி சென்றுள்ளார். அப்போது அங்கு தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கும்  இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள கிளைக்கு மாறுதலாகி சென்றபோது அங்கே ஆதரவற்ற காவியா என்ற பெண்ணை காதலித்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 
அதனை தொடர்ந்து சிங்காரவேலு தனது மூன்று மனைவிகளுடனும் பேசி குடும்பம் நடத்தி வந்துள்ளார் .

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் தனது மூன்றாவது மனைவியை அங்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் காவியா தன்னை பதிவு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என கூறிய நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சிங்காரவேலு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர. மேலும் அவரது செல்போனை கைப்பற்றி அதில் உள்ள எண்களை தொடர்புகொண்டபோது அவருக்கு மூன்று மனைவிகள் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் புதுவை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது கணவரின் உடல் தனக்கு தான் வேண்டும் என சண்டை போட்டுள்ளனர்.பின்னர் இறுதியில் அவரது உடல் முதல் மனைவி சத்யாவிடம் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement