தாயின் கண் முன்னே 3 பெண் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு! துடிதுடித்த தாய்!



3 daughters died front of mom

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 3 சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.மலையனுரில் கிணற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் சுவேதா, நிவேதா, சுஜாதா ஆகியோர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் பெங்களூருவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் அடுத்துள்ள மலையனூரில் உள்ள உறவினர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் மணிகண்டன் அனுப்பி வைத்துள்ளார்.

child

இந்தநிலையில் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்கு தனது மூன்று மகள்களையும் மணிகண்டனின் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது மூன்று குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.

3 மகள்களும் தன் கண் எதிரே தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். தாய் ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாத மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.