அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தங்கையை சீரழித்த 3 அண்ணன்கள்.. சிறுமி 6 மாத கர்ப்பம்.!
புதுவண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பெண்டா. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், இவருடைய 13வயது 2வது மகள் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் இருப்பதாக கூறி அவரை ராயபுரத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே ராயபுரம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்திற்கு விரைவில் வந்த போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணைகள் தனது உறவினர்கள் 3 பேர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். அதன்படி சிறுமியின் பெரியப்பா மகனான மனோஜ், அஜய் மற்றும் கண்ணா பெண்டா ஆகிய மூவரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதில், மனோஜ் நேற்றைய போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள அஜய் மற்றும் கண்ணா பெண்டா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.