உச்சக்கட்ட போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு... போலீசார் விசாரணை!!

உச்சக்கட்ட போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு... போலீசார் விசாரணை!!


2members-died-after-drinking-sanitizer-mixed-with-alcoh

கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துரையில் இரண்டு பேர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகுறு மற்றும் சவ்வுந்தரராஜ் என்பதும், அவர்கள் இருவரும் ஒன்றாக கூலி வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. நேற்று இரவு இருவரும் வேலை முடித்து விட்டு வந்து படித்துறையில் மது அருந்தியுள்ளனர். 

kumbakonam

அவர்கள் சடலத்திற்கு அருகில் மதுபாட்டில்களும், சானிடைசர் பாட்டிலும் கிடந்துள்ளது. அதனை வைத்து போலீசார் இருவரும் உச்சக்கட்ட போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் எதாவது குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.