25 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பரிதாபமாக பறிபோன 3 உயிர்... திருவள்ளூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

25 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பரிதாபமாக பறிபோன 3 உயிர்... திருவள்ளூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


25-years-young-man-murder-for-young-mother-and-2-kids-i

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்காபார் - சுமித்ராபார் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர். துவர்க்காபார் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுலு என்ற 25 வயது வாலிபரும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது துவர்க்காபார் மற்றும் குட்டுலு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு குட்டுலு அடிக்கடி துவர்க்காபார் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனால் குட்டுலுக்கும் துவர்க்காபார் மனைவிக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

Murdee

இந்நிலையில் சம்பவத்தினத்தன்று துவர்க்காபார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தைகள் காணமால் போனதை அடுத்து பக்கத்து வீட்டில் விசாரித்துள்ளார். அப்போது குழந்தைகளுடன் சுமித்ரா, குட்டுலு வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளனர். அதனையடுத்து துவர்க்காபார், குட்டுலு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குழந்தைகள் இரண்டு பேரும் இறந்து கிடந்துள்ளனர்.‌ சுமித்ரா வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சுமித்ராவுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்ததால் குட்டுலு இருவரையும் கொலை செய்துள்ளார். அதனையடுத்து சுமித்ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுமித்ராவையும் கடுமையாக தாக்கி விட்டு குட்டுலு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான குட்டுலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.