தமிழகம்

ஆசை வார்த்தைகளை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன்.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

கோவை மேட்டுப்பாளையம் மாதையான் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(24). இவர் அதே பக்திய

கோவை மேட்டுப்பாளையம் மாதையான் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(24). இவர் அதே பகுதியில் வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவியும் உள்ளார். 

இந்நிலையில் விஜயகுமார் தனது பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் உன்னை நான் 2வது திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகியுள்ளார். 

இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

போலீசார் மெக்கானிக் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் இது குறித்தான வழக்கம் கோவை போக்சோ கோர்ட்டில் நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி ராதிகா தீர்ப்பை வழங்கினார்.

அத்தீர்ப்பில் திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


Advertisement