BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருவள்ளூரில் பரபரப்பு... மக்களே உஷார்!! டூவீலரில் லிப்ட் கொடுத்த 23 வயது இளைஞனுக்கு நிகழ்ந்த அசம்பாவிதம்...
திருவள்ளூர் மாவட்டம் வேம்பூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(23). இவர் வங்கி ஒன்றில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் தனது பணியினை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்ச்செல்வனிடம் மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த மர்ம நபர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். தமிழ்ச்செல்வனும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அங்கு மறைந்திருந்த மேலும் இரண்டு மர்ம நபர்கள் ஓடி வந்துள்ளனர். 3 பேரும் சேர்ந்து அடுத்து நொறுக்கிவிட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி மர்ம நபரில் ஒருவர் தமிழ்ச்செல்வனின் முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கிடந்த தமிழ்ச்செல்வனை அக்கம் பக்கத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தமிழ்ச்செல்வன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தமிழ்செல்வனின் கல்லீரல் மற்றும் நுரையீரல் இடையே சிக்கிய கத்தியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர். தற்போது தமிழ்செல்வன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.