அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இரவு 9 மணிக்கு வாட்ஸ் அப்பிற்கு வந்த புகைப்படம்... ஓபன் செய்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர்கள் சீனிவாசன் - பாரதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெங்கடேசன் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி இரவு வேலை தேடி செல்வதாக தாயிடன் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார் வெங்கடேசன்.
வெளியே சென்ற வெங்கடேசன் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் ஆர்த்தி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் இரண்டாவது மகன் மணிகண்டனின் செல்போனுக்கு இரவு 9 மணி அளவில் வெங்கடேசன் வெட்டு காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இது குறித்து போலீசில் கூறியுள்ளார். போலீசார் அதனை வைத்து விசாரணை நடத்தியதில் வெங்கடேசனின் நண்பர்களான திவாகர், சதிஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது, அவர்கள் கஞ்சா விற்பனை தொடர்பான மோதலில் வெங்கடேசனை கத்தியால் குத்தி கொன்று, உடலை கசம் பகுதியில் பாழடைந்த கட்டிடத்தின் அருகே புதைத்தது தெரிய வந்தது.
அதனையடுத்து போலீசார் கசம் பகுதிக்கு சென்று புதைக்கப்பட்டிருந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான சூர்யா, மணி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.