துடி துடித்து உயிர் இழந்த மகன்.! கதறி துடித்த தாய்..! பன்றிக்காக போட்ட மின்வேலியில் சிக்கி உயிர் இழந்த சோகம்.22 years old boy died by current shock at vellor

பன்றிக்காக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 22 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிக்குப்பம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் (52). கரும்பு மற்றும் கடலை பயிரிட்டுள்ள மகாதேவன் தினம் இரவு நேரத்தில் காட்டு பன்றிகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவதால் அவற்றை தடுக்க தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (22) என்பவர் மகாதேவன் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மகாதேவன் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளார்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகாதேவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மின்வேலில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலைப் பார்த்து சந்தோஷ்குமாரின் தாய் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.