தமிழகம்

தொட்டிலில் சடலமாக கிடந்த 2 வயது குழந்தை..! இரவில் நடந்த விபரீதம்! காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

2 years old baby died who ate chicken at night

தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை அடுத்து உம்மியம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சின்னத்துரை. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 6 வயதில் அன்னபூரணி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளன்னர். 2 வயது குழந்தை தனுஸ்ரீயை அவரது தாயார் தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். காலை அனைவரும் எழுத்துவிட்ட நிலையில் தொட்டிலில் தூங்கிய 2 வயது குழந்தை மட்டும் நீண்ட நேரமாகியும் கண்விழிக்கவில்லை.

தொட்டிலில் கிடந்த குழந்தையை பார்த்த பெற்றோர் குழந்தை பேச்சு மூச்சின்றி, அசைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றுள்ளன்னர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையின் தொண்டையில் சிக்கன் பீஸ் அடைபட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்ததில், அனைவரும் இரவு சிக்கன் சமைத்து சாப்பிட்டதாகவும், குழந்தைக்கும் சிறிது சிக்கன் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

குழந்தைக்கு ஆசையாக கொடுக்கப்பட்ட சிக்கன் அவரது உயிரை பறித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement