தமிழகம்

அட பாவி மனுசனுகளா...! பைக்ல போன நிறைமாத கர்ப்பிணிய இப்படியா பண்ணுவீங்க.? அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள கறம்பக்குடி அருகே உள்ள இலைகடி விடுதி கிராமத்தை ச

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள கறம்பக்குடி அருகே உள்ள இலைகடி விடுதி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி அபிராமி, 32 வயது நிரம்பிய இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில், அபிராமி கறம்பக்குடியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த புதுப்பட்டியைச் சேர்ந்த அழகர், மோகன்ராஜ் ஆகியோர் எச்சில் துப்பியுள்ளனர். 

அவர்கள் துப்பிய எச்சில் பின்னே வந்துகொண்டிருந்த அபிராமி மீது பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, பைக்ல போகும்போது இப்படி எச்சில் துப்புறிங்களே உங்களுக்கு பின்னாடி யாராச்சும் வரங்களானு பார்க்க மாட்டிங்களா... என தட்டிகேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகர், மோகன்ராஜ் ஆகிய இருவரும் அபிராமியை காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அபிராமி கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகர், மோகன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement