அரசியல் தமிழகம் Covid-19

அதிமுகவின் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி.! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Summary:

2 ADMK MLA affected by corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது.

 கொரோனாவால் பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கேஎஸ் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ கேஎஸ் விஜயகுமாரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement