புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
17 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்.. 2 பேர் கைது!
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கடந்த மார்ச் 9-ம் தேதி நடந்த தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு 17 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது, அங்கு கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வந்த நிலையில், 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.