நாள் முழுக்க செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து பலி.!

நாள் முழுக்க செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து பலி.!


16-years-old-student-died-for-continues-to-play-pubg

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து நாள் முழுவதும் செல்போனில் பப்ஜி விளையாடியதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த அம்மாணவன் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடுவதை பொழுது போக்காக கொண்டுள்ளார்.

pubg

இந்நிலையில் சம்பவம் நடத்த நாளன்று அம்மாணவன் நாள் முழுவதும் பப்ஜி விளையாடியதால் மன அழுத்தம் ஏற்ப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அம்மாணவனின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மன நல மருத்துவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். சிறுவர்கள் மொபைல் போனை பயன்படுத்தும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர் கவனிக்க வேண்டும். மேலும் பெற்றோர் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் தங்களது நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறுகின்றனர்.