தமிழகத்தின் தலைநகர் சென்னையை மீண்டும் மிரட்டும் கொரோனா.! ஸ்டான்லி மருத்துவமனையில்16 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு தொற்று உறுதி.!16-doctors-affected-by-corona

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனவால் சாமானிய மக்கள் முதல், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு பின் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். மேலும் பலரும் உயிரிந்த துயரமும் நேர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 செவிலியர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.