15 வயது சிறுமிக்கு 28 வயது இளைஞருடன் நடக்கவிருந்த குழந்தை திருமணம்... ரகசியத்தகவலால் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..! 

15 வயது சிறுமிக்கு 28 வயது இளைஞருடன் நடக்கவிருந்த குழந்தை திருமணம்... ரகசியத்தகவலால் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..! 


15-years-girl-child-marriage-stopped-by-social-welfare

28 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம் சமூக நலத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, விருத்தாசலம் அருகே படுகளானத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீர தமிழன் என்ற 28 வயது இளைஞருடன் நல்லூரில் உள்ள வில்வனேஸ்வரன்  கோவிலில் இன்று திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில் இது குறித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற சமூகநலத்துறையினர் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

Child marriage

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதன் மூலம்,அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சமூகநலத்துறை அலுவலகத்திற்கு வந்த ஒரு ரகசிய தகவலின் பெயரில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சிறுமி திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருவதும் தெரியவந்தது. அத்துடன் சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.