தமிழகம்

செல்போனிற்கு அனுப்பப்பட்ட வீடியோ! அதிர்ச்சியில் 15 வயது சிறுமி எடுத்த விபரீதமுடிவு ! வெளியான பகீர் தகவல்கள்!

Summary:

15 year girl commit suicide for sending her bath video

வேலூர் பாகாயம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளிமாணவி. அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த 3 பேர் அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.

பின்னர் அவரது சித்தப்பா ஒருவரின் செல்போனிற்கு அந்த வீடியோவை அனுப்பிய அந்த இளைஞர்கள் போன் செய்து சிறுமியை வீடியோவை பார்க்குமாறு கூடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி செல்போனில் தான் குளிக்கும் வீடியோ இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து அந்த கயவர்கள் சிறுமியிடம் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் தனியாக காட்டுப்பகுதிக்கு வர வேண்டும் எனவும், இல்லை என்றால் வீடியோவை வாட்ஸ்அப்பில் அனைவருக்கும் அனுப்பிவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். மாணவி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் மூன்று பேரும் மாறி மாறி அந்த வீடியோவை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் செய்வதறியாது தவித்துப் போன அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது நிறைந்த பாலாஜி, 19 வயதுமிக்க கணேஷ் மற்றும் 22 வயது நிறைந்த ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement