புதுசா ரேஷன்கார்டு வாங்க போறீங்களா?.. இனி கார்டு 15 நாட்களிலே கிடைக்கும்..! அசத்தல் அறிவிப்பு..!!15-days-for-create-ration-card

ஏழை எளிய மக்களுக்கு நியாயவிலை கடைகளின் மூலமாக மலிவு விலையில் பருப்பு, அரிசி, சர்க்கரை உட்பட பல பொருட்களை வழங்க நியாயவிலை கடைகள் பெறும் உதவிசெய்து வருகிறது. 

தற்போது புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. 

தமிழ்நாடு

இதனால் மாவட்ட அளவில் ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் முறை கொண்டுவரப்பட்ட நிலையில், 15 நாட்களில் புதிதாக அச்சடித்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டு, நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்றவுடன் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.