தமிழகம்

கள்ளத்தொடர்பால் பெற்ற மகளுக்கு நிகழ்ந்த சோகம்.!

Summary:

14 vayathu sirumiku palliyal thollai

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது மனைவியுடன் ஏற்ப்பட்ட தகராறால் அவரை பிரிந்து பொள்ளாச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்த இடத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் முத்துக்குமாருக்கு தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.

அந்த பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்து வந்த முத்துக்குமார் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனை பற்றி சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 


Advertisement