13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கள்ள காதலியின் மகளுக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோவில் ஓட்டுனர் கைது..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கள்ள காதலியின் மகளுக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோவில் ஓட்டுனர் கைது..!


13-year-old girl sexually harassed; Fake lover's daughter's brutality.. Driver arrested in Pocso..!

சித்தோட்டில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

ஈரோடு, பவானி அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (36). சரக்கு ஆட்டோ ஓட்டுனர். திருமணமான இவருக்கு மனைவியும், மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அந்த பெண்ணுக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் ராஜா அந்த பெண்ணையும், அவருடைய மகளையும் சித்தோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். 

இந்நிலையில் அந்த பெண் இல்லாத நேரத்தில் அவருடைய மகளுக்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக யாரிடமாவது சொன்னால் உன்னையும், உன் தாயையும் கொன்றுவிடுவேன் என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். உடனே அந்த பெண் இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்னமா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ராஜாவை கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.