மாணவர்களே ரெடியா!! விரைவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?? தள்ளிவைப்போமே தவிர ரத்து செய்யமாட்டோம்!! அமைச்சர் தகவல்



12th-public-exam-may-not-be-cancelled

12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸால் பலதரப்பட்ட மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் வரும் 24 ஆம் தேதிவரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனால் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வேண்டிய பொது தேர்வுகளும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமே தவிர, தேர்வுகள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், விரைவில் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்".