தமிழகம்

வயிற்று வலி, வீங்கிக்கொண்டே போன வயிறு! 7 ஆம் வகுப்பு மாணவியை சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

12 years old school girl is pregnant police searching accused

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிறுமி துடித்துள்ளார்.

பெற்றோர் சிறுமியை மருத்துவர்களிடம் அழைத்து சென்றும் வயிற்றுவலி குணமாகவில்லை இந்நிலையில் சிறுமிக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் பெற்றோர் மீண்டும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளன்னர்.

இந்த முறை சிறுமியின் வயிறு சற்று வீக்கமாக இருந்ததால் மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகித்து அதற்கான பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமியை யாரோ ஏமாற்றி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் விசாரணை சற்று பின்தங்கியுள்ளது என்றும், சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் இந்த நிலைக்கு யார் காரணம் என விசாரிக்கப்பட்டு தண்டனை வாங்கி தரப்படும் என கூறியுள்ளனர்.


Advertisement