தமிழகம் 18 Plus

ஆசிரியை மீது தீராத ஆசை! 11 வகுப்பு மாணவனால் ஆசிரியைக்கு ஏற்பட்ட விபரீதம்.

Summary:

11th standard student stabbed tiusion teacher

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்து அமைந்துள்ள ஆலன்சோலை என்னும் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் ஆசிரியை உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பள்ளிநேரங்கள் போக மீத நேரங்களில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியையிடம் டியூசன் வரும் 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியை மீது ஆசை பட்டுள்ளார். எப்படியாவது ஆசிரியையை அடையவேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது வீட்டிற்கு சென்ற மாணவன் தனது ஆசையை ஆசிரியையிடம் கூறி தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவிக்கவே அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறையை செய்ய முயன்றுள்ளார் அந்த மாணவர். இதனால் ஆசிரியை சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஆசிரியையின் வீட்டிற்கு ஓடிவந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் அந்த மாணவன் ஆசிரியை பல இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியை மீட்டு ஆக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளன்னர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியுள்ள சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement