அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா! அவர்கள் எங்கு சென்றவர்கள்.?



11-people-affected-by-corona-in-ashok-nagar

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் அச்சுறுத்தலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில், கடந்த சில நாட்களாக நாளுக்குநாள் பதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் 231 பேருக்கு ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.

koyambedu

 தமிழகத்தில் சென்னை தான் கொரோனா அதிகம் பாதித்த இடமாக உள்ளது. இந்தநிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க சென்ற, விற்பனையில் ஈடுபட்ட அசோக் நகரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அசோக் நகரில் காய்கறி விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இந்தநிலையில், சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  இதேபோன்று கோயம்பேடு சந்தையில் இருந்து தஞ்சை சென்ற பழவியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.