கேட்கவே மனசு பதறுது!! தலை துண்டா போச்சு!! துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்து உயிரிழந்த சிறுமி..



10-years-old-girl-dead-in-bike-accident

கழுத்தில் அணிந்திருத துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியதால், சிறுமி தலை துண்டித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணனூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். இவரது 10 வயது மகள் தர்ஷனா. தர்ஷனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இருவரும் மருத்துவமனையில் இருந்து திரும்பிய வழியில், தர்ஷனா கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதில் தர்ஷனா கீழே விழுந்து இழுத்துச்செல்லப்பட்டநிலையில், அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.